எரிக் ஹாப்ஸ்பாம் ஜெர்மானிய சோசலிச இளைஞர் இயக்கத்தில் சேர்ந்தார். 1936இல் ஜெர்மானிய கம்யூனிஸ்டுக்கட்சியில் சேர்ந்தார். கம்யூனிஸ்டு வரலாற்றாசிரியர் சங்கத்தில் 1946 முதல் 1956 வரை பணியாற்றினார்.
ஹாப்ஸ்பாம் பின்னர் ஐரோப்பியகம்யூனிசத்தை ஆதரித்தார். 1978ல் ஹாப்ஸ்பாம் சமூகத்தில் தொழிலாளர்களுக்கு இருந்த மையப்பங்களிப்பு இல்லாமலாகிவிட்டது என்றும் இனிமேல் மார்க்சியம் அவர்களை மட்டுமே நம்பி இருக்கமுடியாது என்றும் ‘உழைப்பாளர்களின் முன்னோக்கிய பயணம் தடைபட்டதா?’ என்ற கட்டுரையில் எழுதினார். அந்தக்கருத்து சம்பிரதாய மார்க்ஸியர் நடுவே கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியது. மார்க்சிசம் டுடே இதழில் தொடர்ச்சியாக அரசியல் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். 1960களுக்குப்பின் ஹாப்ஸ்பாம் சோவியத் பாணி மார்க்சியத்தில் நம்பிக்கை இழந்து மார்க்சிய செயல்திட்டங்களில் சமகாலத்தன்மை கொண்ட மாறுதல்களுக்காக வாதிட ஆரம்பித்தார்.ஹாப்ஸ்பாம் ஐரோப்பிய வரலாற்றைப்பற்றிய அவரது மூன்று நூல்களுக்காகவே பெரிதும் மதிக்கப்படுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டைப்பற்றி அவர் எழுதிய புரட்சியின் யுகம் (The Age of Revolution: Europe 1789–1848)முதலியத்தின் யுகம் (The Age of Capital: 1848–1875)சாம்ராஜ்ய யுகம் (The Age of Empire: 1875–1914) ஆகிய நூல்கள் செவ்வியல் ஆக்கங்கள் என கருதப்படுகின்றன. ஹாப்ஸ்பாம் எழுதிய மார்க்ஸிய நூல்கள் மார்க்ஸிய ஆய்வாளர்கள் நடுவே செல்வாக்குடன் உள்ளன.
===பெரணமல்லூர் சேகரன்===